Connect with us

Cinemapettai

லைக்காவை கழட்டிவிட்ட கமல்.. அட போங்கட என டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுக்கு வண்டியை திருப்பிய ஷங்கர்!

kamal-shankar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லைக்காவை கழட்டிவிட்ட கமல்.. அட போங்கட என டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுக்கு வண்டியை திருப்பிய ஷங்கர்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். ஏனெனில், இவரது ஒவ்வொரு படைப்பும் தரமாக, தாறுமாறாக இருக்கும். மேலும் ஷங்கரது இயக்கத்தில் தயாராகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேபோல், ஷங்கரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவு பூர்த்தி செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்லாமல், ஷங்கர் வேறு ஒரு படத்தை நோக்கி தனது வண்டியையும் திருப்பி விட்டாராம். இந்த தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அதாவது, ஷங்கர் பிரம்மாண்டத்தின் பிரம்மாண்டமாய் இயக்கிய ‘2.O’ திரைப்படத்திற்குப் பிறகு, கமலுடன் இணைந்து ‘இந்தியன் 2’ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தால் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது வரை இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்படவில்லை.

இவ்வாறிருக்க, கமல் வரும் ஜனவரி மாதம் முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராக உள்ள ‘விக்ரம்’ படத்தில் நடிக்க உள்ளாராம்.

இதன் காரணமாக, தற்போது ஷங்கர் வேறு ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. மேலும் இந்தப்படத்தில் கேஜிஎஃப்  புகழ் யாஷ், துருவ் விக்ரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனராம்.

indian2-cinemapettai

indian2-cinemapettai

எனவே, பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மற்றும் வெற்றி நாயகன் யாஷ் ஆகியோரின் கூட்டணியில் உருவாக உள்ள இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு எழுந்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top