தேதியை பார்த்து பிளான் போடும் ஷங்கர்..கொஞ்சம் மிஸ் ஆனாலும் பீஸ் தான்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து ஒரு படம் பண்ணி வருகிறார். தற்காலிகமாக இப்படத்திற்கு ஆர்சி 15 பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தெலுங்கு திரைப்பட ஊழியர்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்கு தெலுங்கு படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தில் ராஜு தயாரிப்பில் மற்றொரு படமான வாரிசு படத்தின் சூட்டிங் அங்கு நடைபெற்று வருகிறது.

அதாவது வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவானாலும் முழுக்க முழுக்க இது தமிழ் படம் தான். இதனால் அங்கு தமிழ் படங்களுக்கு சூட்டிங் நடத்த அனுமதித்துள்ளனர். இதனால் ஷங்கர் மிக அப்செட்டில் இருந்தார்.

இந்நிலையில் பல வருடமாக கிடப்பில் போட்டுள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை விரைந்து நடத்த லைகா நிறுவனம் ஷங்கரிடம் கூறியுள்ளது. ஆனால் ராம் சரண் படத்தை முடித்துவிட்டு தான் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்குவேன் என ஷங்கர் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது ஹைதராபாத்தில் காலவரையற்ற போராட்டம் என்பதால் இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்து விடலாம் என ஷங்கர் யோசித்து உள்ளாராம். அங்கு போராட்டம் முடிந்த பிறகு மீண்டும் ராம் சரண் படத்தை தொடங்கலாம் என்ற முடிவில் ஷங்கர் உள்ளார்.

தெலுங்கு ஊழியர்கள் போராட்டம் ஷங்கருக்கு பெரிய தலைவலியாக இருக்கும் என நினைத்த நிலையில் அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்தியன் 2 படப்பிடிப்பை நடத்தயுள்ளார். ஒருவேளை தெலுங்கு ஊழியர்களின் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் இரட்டை சவாரி செய்வது போல இந்தியன் 2, ஆர்சிபி 15 என்ற இரண்டு படப்பிடிப்பையும் ஒரே நேரத்தில் நடத்தும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கொஞ்சம் மிஸ் ஆனாலும் பீஸ் என்ற நிலைமையில் ஷங்கர் உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்