Connect with us

Cinemapettai

ஷங்கர் சார் போட்ட விதை இது! ஹீரோ குறித்து சிவகார்த்திகேயன்

shankar-siva

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷங்கர் சார் போட்ட விதை இது! ஹீரோ குறித்து சிவகார்த்திகேயன்

ஹீரோ படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், ஜார்ஜ் என்னிடம் வந்து என் பிரண்ட் ஒருத்தரு இருக்காருண்ணே, ஷாட் பிலிம் பன்றோம்ணே என்று கூறினார். அப்படித்தான் மித்ரன் எனக்கு அறிமுகம் ஆனார். நாங்கள் ஒரு ஷாட் பிலிம் செய்தோம். அதன்பிறகு தான் படமாக இதை எடுத்துச்சென்றோம்.

இரும்புத்திரைக்கு முன்பே இந்த படத்தை செய்வதா மித்ரனும் நானும் கமிட்டி ஆகிவிட்டோம். ஜார்ஜ் உங்கள் நான் நண்பன்.இனி உங்கள் ரசிகனாக மாறிவிட்டேன். ஆக்சன் பிளாக்கை சிறப்பாக எடுத்துள்ளார். இன்னும் நிறைய படங்கள் உங்களுடன் பண்ண வேண்டும்என்று விரும்புகிறேன்.

எனக்கு ரெமோ டிரெய்லர் ரொம்ப பிடிக்கும். தயாரிப்பாளராக கனா டிரெய்லர் ரொம்ப பிடிக்கும். ஹீரோ டிரெய்லர் சிறப்பாக வந்துள்ளது.இதில் என் முகம்வருமா என்று கேட்டேவிட்டேன். கடைசியல் என் படத்திற்கு மாஸ்க் போட்டு காட்டியிருப்பார்கள்.

இந்த ஹீரோ படம் ஷங்கர் சார் போட்ட விதை. அவருக்கு நன்றி. அவர் காட்டிய பாதையில் இன்றைக்கு இப்படி நாம் படம் எடுக்கிறோம். ஹீரோ படத்தை 2 பாகம் மூன்றாம் பாகம் என பண்ணுவதற்கு ஆசை என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top