அரசியல் அழுத்தத்தால் தடுமாறும் இயக்குனர் ஷங்கர்.. ஏட்டிக்கு போட்டியாக ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் ஹீரோ

Director Shankar:இந்திய சினிமாவை பொறுத்த வரைக்கும் கருத்து சுதந்திரம் என்பது இனிமேல் கிடையாது என சமீபத்தில் நடந்த நிறைய சம்பவங்களை வைத்து சொல்லலாம். நடிகை நயன்தாராவின் அன்னபூரணி படத்தைக் கூட இதற்கு எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். அப்படி ஒரு அரசியல் சூழ்ச்சியில் தான் சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் சிக்கி இருப்பது வெளியில் தெரிய வந்திருக்கிறது. அவரை போன்ற ஒரு சிறந்த இயக்குனர் இப்படி தட்டு தடுமாறுவதை பார்க்கும் பொழுது சினிமா எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என எல்லோருக்குமே வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

இயக்குனர் ஷங்கரை பொறுத்தவரைக்கும் அவருக்கு பிரம்மாண்ட இயக்குனர் என அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி அவருடைய படங்களை நன்றாக உற்று கவனித்தால் அவர் சமூக கருத்துள்ள கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கியிருப்பது நன்றாகவே தெரியும். ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன் போன்ற படங்களில் எல்லாம் ஊழலுக்கு எதிராக கருத்துக்களை சொல்லி இருப்பார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. 2.0 படம் முடிந்த கையோடு ஷங்கர் 2019 ஆம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் கதையை ஆரம்பித்தார். அதில் நடந்த நிறைய எதிர்பாராத சம்பவங்களால் அந்த படத்தின் வேலைகள் அப்படியே தொய்வு அடைந்து விட்டது. அதைத்தொடர்ந்து இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என்ற இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் ஷங்கர் இயக்கிக் கொண்டிருந்தார். இந்த இரண்டுமே தற்போது சமீபத்திய ரிலீஸ் தேதியிலிருந்து தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

Also Read:ரஜினியை நம்புறது வேஸ்ட்.. விஜய்யின் அரசியல் என்ட்ரியால் முக்கிய நடிகருக்கு வலை வீசும் ஆளும் கட்சி

ஷங்கர் இயக்கிய இந்த இரண்டு படங்களின் தேதியுமே தள்ளி போவதற்கு முக்கிய காரணமாக இப்போது அரசியல் அழுத்தம் தான் சொல்லப்படுகிறது. நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தில் மோடி அரசுக்கு எதிராக ஒரு சில காட்சிகள் இடம் பெற்று இருக்கிறதாம். இந்த காட்சிகளை படத்தில் வைக்கக்கூடாது என்று ஹீரோ ராம் சரணே ஷங்கரிடம் வலியுறுத்தி இருக்கிறார். இது ஷங்கருக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

தடுமாறும் இயக்குனர் ஷங்கர்

மோடிக்கு எதிராக பேசப்படும் காட்சிகளை நீக்கிவிட்டு அதற்கு தகுந்தார் போல் காட்சி எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு பத்து நாள் கால்ஷீட் கொடுங்கள். அப்படி உங்களால் கொடுக்க முடியவில்லை என்றால், ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகள் தான் படமாக்கப்படும் என ஷங்கர் திட்டவட்டமாக ராம்சரண் இடம் சொல்லி இருக்கிறார். இதனால் இந்த படம் தேர்தல் முடிந்த பிறகு தான் ரிலீஸுக்கு அனுமதிக்கப்படும் என்ற நிலையில் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் இந்தியன் 2 படத்திற்கும் இதுதான் நிலைமை. இந்த படமும் அரசுக்கு எதிரான கதை களத்தை கொண்டிருப்பதால் தேர்தலுக்குப் பிறகுதான் ரிலீஸ் செய்யப்படும். இப்படி இரண்டு படங்களை கையில் வைத்துக் கொண்டு அரசியல் அழுத்தத்தால் எதுவும் செய்ய முடியாமல் ஷங்கர் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

Also Read:பல நூறு கோடி சம்பளம், அனிருத்தின் அடுத்தடுத்த வெளிவர உள்ள 13 படங்கள்.. 2024-25 கிங் மேக்கர் நான்தான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்