fbpx
Connect with us

Cinemapettai

‘நண்பன்-2 : மீண்டும் விஜய்யுடன் ஷங்கர் இணைய வாய்ப்பு

News | செய்திகள்

‘நண்பன்-2 : மீண்டும் விஜய்யுடன் ஷங்கர் இணைய வாய்ப்பு

director-shankar-vijayஅமீர்கான், மாதவன், கரீனா கபூர் நடித்த ‘3 இடியட்ஸ்’ என்ற பாலிவுட் திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகி மிகப்பெரிய வசூலை கொடுத்தது. இந்த படம் தமிழில் இளையதளபதி விஜய், இலியானா நடிப்பில் ஷங்கர் இயக்கினார். ‘நண்பன்’ என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வசூலை பெற்றது.

இந்நிலையில் ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி முடிவு செய்திருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் தகவல்கள் வெளிவரும் என்றும் அமீர்கான் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்தியில் ‘3 இடியட்ஸ்’ இரண்டாம் பாகம் வெளிவந்தால் கண்டிப்பாக தமிழிலும் ‘நண்பன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும், எனவே இயக்குனர் ஷங்கர் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோர் மீண்டும் விரைவில் இணைவார்கள் என்றும் கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top