fbpx
Connect with us

Cinemapettai

இந்தியன் 2 பட சம்பவத்தைப் பற்றி ஷங்கரின் உருக்கமான பதிவு.. நிலைகுலைந்து போன தமிழ் சினிமா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியன் 2 பட சம்பவத்தைப் பற்றி ஷங்கரின் உருக்கமான பதிவு.. நிலைகுலைந்து போன தமிழ் சினிமா

இந்திய சினிமா உலகமே கடந்தவாரம் அதிர்ச்சியில் உறைந்தது என்றால் அது இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்த சம்பவம் தான். கமலஹாசன் காஜல்அகர்வால் ரகுல் பிரீத் சிங் போன்றோர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்று வந்தது.

இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் முக்கியமான காட்சியை எடுப்பதற்காக செட் அமைத்துக் கொண்டிருக்கும் போது கிரேனுக்கு அடியில் நின்று கொண்டிருந்த மூன்று பேர் இறந்த சம்பவம் சினிமா உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனால் கமல் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்ததாக கூறி தனது சோகத்தை வெளிப்படுத்தினார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி கொடுத்து ஆதரவளித்தார். அதேபோல் லைக்கா நிறுவனமும் இறந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. ஆனால் சங்கர் தரப்பிலிருந்து எதுவும் வரவில்லை என ஆதங்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஷங்கர் தனது ட்விட்டர் மூலம் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, இந்த பதிவை மிகவும் வருத்தத்துடன் பதிவிடுகிறேன் என்றும், எனது குழுவினரை இழந்தது தனது மனதுக்கு மிகவும் பாதிப்பை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று இரவு பகல் தூக்கம் வராமல் அதே யோசனையாக இருப்பதாகவும், அப்படி அந்த கிரேன் என்மீது விழுந்திருந்தால் நான் சந்தோசமாக சென்றிருப்பேன் எனவும் மிகவும் வருத்தப்பட்டு கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆறுதல் எனவும் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

shankar-tweet

shankar-tweet

தற்போது சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் சங்கருக்கு ட்விட்டர் மூலம் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top