Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷங்கர் படத்தில் இருந்து விலகிய விஜய் காரணம் தெரியுமா.?

முதல்வன் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

விஜய்யுடன் நடிக்க அல்லது சேர்ந்து பணியாற்ற பல பிரபலங்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் ஆனால் தளபதி ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை.

 

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நண்பன் படம் நடித்தாலும் ஷங்கர் ஸ்டைலில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது விஜய்யின் நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது.ஆனால் இது பல வருடங்களுக்கு முன்பே நடக்கவேண்டியது.

இந்த முதல்வன் படம் முதன் முதலில் ரஜினியிடம் தான் பேச்சுவார்த்தை நடந்தது அன்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் ரஜினி அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் அதனால் பின்பு விஜய்யிடம் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்த ஆனால் விஜய்யோ சில படங்களில் கமிட் ஆனதால் நடிக்க முடியாமல் போனது அதனால் தான் இந்த படம் அர்ஜுனுக்கு சென்றது.

இந்த படத்தில் நடிக்காததை நினைத்து விஜய் இப்பொழுதும் வருத்தபடுகிறார் அதேபோல் விரைவில் இவர்களின் கூட்டணி அமையவேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை.

ரஜினி முதல்வன் படத்தில் நடித்திருந்தால் அவரின் அரசியல் வாழ்க்கை கொஞ்சம் முன்னதாகவே ஆரம்பித்திருப்பார் என ரஜினி ரசிர்கள் கூறுகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top