துஜே மேரி கஸம் எனும் படத்தில் இந்தியில் அறிமுகமான நடிகை, தமிழில் ஷங்கரால் அறிமுகப்படுத்தபட்டார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆக அமைந்தது. துரு துரு என்ற பேச்சும், வசீகரிக்கும் அழகும், இவருக்கு பட வாய்ப்புகளை அள்ளி கொடுத்தது.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், பாலிவுட் பக்கம் போகாமல் இருந்தார். குறிப்பாக இவருக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம். ஆம். “ஹஹா .. ஹாசினி” என்ற ஒற்றை வார்த்தையில் இளைஞர்களை கிறங்கடிக்க வைத்தார். குறிப்பாக நடிகர் விஜயுடன் இவர் போடும் செல்ல சண்டை, இன்றளவும், ரசிகர்கள் சலிக்காமல் ரசித்துக்கொண்டிருப்பார்.
இந்த நிலையில், ரித்தேஷ் தேஷ்முக் உடன் காதல் வயப்பட்டார். அதுவும் 16 வயது முதலே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவரை முதல் படத்தில் பார்த்தபோதே, ஜெனீலியாவிற்கு மிகவும் பிடித்து விட்டதாம். ஆனால், ரித்தேஷ் மகாராஷ்டிர முதலமைச்சரின் மகன், அதனால் மிகவும் திமிர் பிடித்தவராக இருப்பார் என்று தான் ஜெனிலியா முதலில் நினைத்துள்ளார்.
முதலமைச்சர் மகனுடன் தீரா காதல்
ஆனால், அதற்கு எதிர்மாறாக இருந்துள்ளார் ரித்தேஷ். ரித்தேஷ், ஜெனிலியா இருவருக்கும் ‘துஜே மேரி கசம்’ படப்பிடிப்பிலேயே காதல் மலர்ந்தது. 9 வருட காதலுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார் ஜெனிலியா.
10 வருடத்திற்கும் மேல் சினிமாவை விட்டு விலகி குடும்பம், குழந்தைகளை கவனித்து வந்த ஜெனிலியா, 10 வருடத்திற்கு பிறகு தனது கணவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிகை ஜெனிலியாவை திரையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். ரித்தேஷ், ஜெனிலியா இருவருமே பாலிவுட்டின் மிகவும் பிரபலமான தம்பதிகளில் ஒருவர். இந்த நிலையில், இவர்கள் காதல் வாழ்க்கை பற்றி தெரிந்த பலருக்கு, முதலமைச்சர் மருமகள் என்ற உண்மை மெல்ல மெல்ல தான் தெரிய வந்தது.
புளியங்கொம்பாக பிடித்த ஷங்கர் பட நடிகை
- தளபதி 69க்கு வெளிவரும் புது அப்டேட்
- இந்தியன் 2 ஆபத்தை அறிந்த வெற்றிமாறன்
- 27 ஆண்டுகள் கழித்து நடந்த மேஜிக்