Connect with us

Cinemapettai

நாங்க ரெண்டு பேரும் ரெடி.. பரபரப்பைக் கிளப்பிய சங்கர்.. அப்போ தளபதி 65?

vijay-shankar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாங்க ரெண்டு பேரும் ரெடி.. பரபரப்பைக் கிளப்பிய சங்கர்.. அப்போ தளபதி 65?

தமிழ் சினிமா உலகமே எப்பொழுது தளபதி விஜய் மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இணைவார்கள் என காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கான காலம் வந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் பட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த சங்கர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது, தளபதி விஜய்யும் நானும் ரெடி தான் என்றும், எப்பொழுது வேண்டுமானாலும் அது நடக்கலாம் என்று ரசிகர்களுக்கு ஹிண்டு கொடுத்துள்ளார்.

இதனால் தளபதி 65 படத்தை இயக்கப்போகும் இயக்குனர் பற்றி தெரிய வந்துள்ளது. அது சங்கர் ஆகவும் இருக்கலாம் என இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாகவே தளபதி65 படத்தை இயக்கப்போவது வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், மகிழ்திருமேனி என பல பேச்சுகள் அடிபட்டது. இதற்கிடையில் சங்கர் இப்படி கூறியது மேலும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கண்டிப்பா பிரம்மாண்டத்திற்கு குறைச்சல் இருக்காது என்பது மட்டும் உறுதி. சங்கர் ஏற்கனவே தளபதி விஜய்யை வைத்து நண்பன் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top