fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் நடித்த 5 படங்கள்.. தியேட்டரில் செம்ம ரெஸ்பான்ஸ்!

shankar-acted-movies

Entertainment | பொழுதுபோக்கு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் நடித்த 5 படங்கள்.. தியேட்டரில் செம்ம ரெஸ்பான்ஸ்!

இயக்குனர் ஷங்கர் டிப்ளமோ மெக்கானிக்கல் இஞ்சினியர் படிப்பை முடித்துவிட்டு அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றி இயக்குனர்களுள் ஒருவரான எஸ்ஏ சந்திரசேகரன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். அப்போது எஸ் ஏ சந்திரசேகரன் படங்களில் ஒரு சில காட்சிகளில் நடிப்பதற்கு ஷங்கருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஜெண்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். அதன் பிறகு பல நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் இவர் ஆரம்ப காலத்தில் ஒரு சில படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிகராக நடித்துள்ளார்.

shankar

shankar

சீதா: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ரகுமான், சரத்குமார் மற்றும் கனகா ஆகியோர் நடிப்பில் உருவான சீதா படத்தில் ஷங்கருக்கு நடிப்பதற்கு எஸ் ஏ சந்திரசேகர் வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்படத்தின் ஒரு சிறிய காட்சியில் மட்டும் இயக்குனர் ஷங்கர் நடித்துள்ளார்.

ஷங்கரின் நடிப்பை பார்க்க கிளிக் செய்யவும்

வசந்த ராகம்: சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் ரகுமான் நடிப்பில் உருவான திரைப்படம் வசந்த ராகம். செந்தில் மற்றும் விஜயகுமார் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் பிரின்டிங் பிரஸ் வேலை பார்ப்பது போல் சங்கர் நடித்திருப்பார்.

ஷங்கரின் நடிப்பை பார்க்க கிளிக் செய்யவும்

இந்தியன்: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிலா, கவுண்டமணி மற்றும் செந்தில் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ஷங்கர் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் ஒரே ஒரு காட்சி மட்டும் நடித்துவிட்டு சென்றிருப்பார்.

சிவாஜி தி பாஸ்: ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் சிவாஜி தி பாஸ். இப்படத்தில் ஸ்ரேயா சரண், விவேக் மற்றும் மணிவண்ணன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நயன்தாரா பல்லேலக்கா எனும் பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். அதில் ஷங்கர் மற்றும் கே வி ஆனந்த் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் அந்த பாடலில் ஷங்கர் மொபைல் போனை கேட்டு தூக்கி எறிவது போல் நடித்திருப்பார்.

நண்பன்: ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் நண்பன். இப்படத்தில் இலியானா, ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அஸ்க் அஸ்க் எனும் பாடலில் ஷங்கர் படத்தை இயக்குவது போல் காட்சியில் நடித்திருப்பார். இப்படி இயக்கத்தை தாண்டி சின்ன சின்ன காட்சிகளில் நடித்து இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சிரியமாக உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top