ராஜாதிராஜாவை விமர்சனம் என்ற பெய‌‌ரில் அடித்து துவைத்து காயப் போட்டாலும் போட்டார், சுஹாசினி என்ற பெயரை கேட்டாலே ஹிஸ்டீ‌ரியா பேஷ‌ண்டாகி விடுகிறார் ஷக்தி சிதம்பரம்.

ராஜாதிராஜா தமிழ் சினிமாவை 20 வருடங்கள் பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டது என்றதும், எம்.‌ஜி.ஆரை ர‌ஜினி காப்பியடித்தார், ர‌ஜினியை விஜய் காப்பியடித்தார் என்று சுஹாசினி விமர்சனத்தில் சொன்னதும்தான் அவரை ரொம்பவே பாதித்திருக்கிறது.

அதிகம் படித்தவை:  பா. ரஞ்சித்தின் அடுத்த படத்தில் நடிக்கும் குஜராத்தின் பிரபல தலித் எம்.எல்.ஏ.!

Mani Ratnam-1

காயத்துக்கு களிம்பு போடுவதாக நினைத்து மணிரத்னத்தை சகட்டுமேனிக்கு காய்ச்சியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம். அவரது கேள்வி இதுதான். என்னுடைய படத்தை குறை சொல்லும் சுஹாசினியின் கணவர் மணிரத்னத்தின் படங்கள் மட்டும் என்ன புதுமையானவையா? மணிரத்னம் அடிக்காத காப்பியா?

Mani Ratnam-2

இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்பு நடந்த ராமாயண கதையை காப்பியடித்து ராவண் படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். மகாபாரதத்தில் து‌ரியோதனன், கர்ணன் நட்பை உல்டா செய்து தளபதி பண்ணினார். பாக்யரா‌ஜின் அந்த ஏழு நாட்கள் படத்தை மௌனராகமாக்கினார். அவ‌‌ரிடம் போய் ஏன் பழைய விஷயங்களை படமாக்குகிறீர்கள் என்று கேட்பதுதானே என கேள்‌வி எழுப்பியுள்ளார் ஷக்தி சிதம்பரம்.

அதிகம் படித்தவை:  வஞ்சகர் உலகம் படத்தின் 'கண்ணாடி நெஞ்சன்', 'கிறுக்கன்' வீடியோ பாடல் !

சஹாசினியின் விமர்சனத்தால் ஒரு சில‌‌ரின் காப்பி விவகாரங்கள் வெளியே வந்திருக்கிறது.