Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்றென்றும் நன்றியுடன் நான். வைரலாகுது NGK சூர்யா பற்றி இயக்குனர் செல்வராகவன் பதிவிட்ட ட்வீட்.
சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீசான அரசியல் கலந்த திரில்லர் படமே நந்த கோபாலன் குமரன்.
NGK படத்திற்கு முதல் நாள் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. எனினும் பின்னர் சமூகவலைத்தள பக்கங்களில் பலர் தங்களின் பார்வையில் குமரன் எப்படி பட்டவன்; அவன் நோக்கம் என்ன, என்றெல்லாம் விளக்கம் தந்தனர். எனினும் படம் வெளியாகி பத்து நாட்கள் முடிந்து விட்டது. இந்நிலையில் நேற்று செல்வா தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
‘NGK கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து, அதன் பல்வேறு பரிணாமங்களை கணக்கச்சிதமாக நடித்து முடித்த சூர்யா சாருக்கு நான் என்றுமே நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஒருவருடமாக அவர் குமரனாகவே வாழ்ந்தார். அவர் எங்கள் அனைவருக்கு நல்ல பலத்தை கொடுத்தார். நன்றிகள் ஆயிரம் சார். நான் எப்பொழுதும் சொல்வது போல நீங்கள் இயக்குனருக்கான மகிழ்ச்சி தரும் ஆர்ட்டிஸ்ட்.’ என பதிவிட்டுள்ளார்.
Forever grateful to @Suriya_offl sir who brought life and played all the layers of #NGK to perfection. He literally lived as #NGK for almost a year. He had been such a pillar of strength for all of us. Thank you so much sir! As I alwways said you are 'directors delight' ??
— selvaraghavan (@selvaraghavan) June 9, 2019
