selva

இயக்குனர் கஸ்தூரி ராஜவின் மகனும் தமிழ் திரைபடதுரையின் இயக்குனருமாவார் செல்வராகவன் .

அவலங்களின் அழகை, அவமானங்களின் வெடிப்புகளைத் துணிவுடன் திரையில் கொண்டுவருபவர் செல்வராகவன். மக்களோடு மனரீதியாகத் தொடர்புகொண்டவன்தான் ஒரு திரைப் படைப்பாளியாக இருக்க முடியும் என்று நம்புகிறவர்.

Selvaraghavan

சினிமாவை தூய கலையாக மட்டுமே பார்க்க வேண்டும், அதில் வணிக அம்சங்களைத் திணிப்பது அந்தக் கலை மீதான வன்முறை என்று கூறுபவர். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் பழமையை இறுகப் பிடித்துக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றிவருவதாகத் துணிவுடன் தொடர்ந்து கூறி வருபவர்.

‘காதல் கொண்டேன்’ படத்தில் தொடங்கி ‘இரண்டாம் உலகம்’ வரை உண்மையான காதலை நோக்கிய ஓயாத தேடலில் உழல்பவை செல்வராகவனின் படங்கள்.

selva

பொய், காமம் இரண்டிலும் ஊறிக்கிடப்பதே இன்றைய காதல் எனத் தனது படங்களில் வரையறுக்கும் அவர், சமூக ஏற்றத்தாழ்வுகளால், தாழ்வு மனப்பான்மையால் கிழிபடும் சாமானிய மனிதர்களிடமிருந்து தன் கதையின் நாயகர்களைப் படைக்க விரும்புபவர்.

அதிகம் படித்தவை:  வேலைகாரர்கள் எல்லாம் எஜமானர்கள் ஆகிட்டாங்க.! வருத்தெடுக்கும் கமல்.!

எல்லா நிகழ்வுகளையும் போலத்தான் இவையும் எனத் துணிவுமிக்க பாலியல் காட்சிகளால் பார்வையாளர்களை அதிரச் செய்பவர்.

selva

90-களுக்குப் பிறகான நகர்ப்புற, கீழ் மத்தியதர வர்க்க இளைஞர்களின் ஏக்கங்களையும் மீறல்களையும் தைரியமாகவும் மூர்க்கத்துடனும் கலாச்சாரப் போலித்தனங்களைக் கீழே போட்டு மிதித்தபடி எடுத்து வைத்தவை இவர் இயக்கிய காதல் காவியங்கள்.

அன்பு, உறவுகள், மதிப்பீடுகள் அனைத்தும் நிச்சயமற்றுப் போன உலகில், தனது விளிம்புநிலைக் கதாபாத்திரங்களின் அகால மரணம் மூலம் தனது படங்களுக்குக் காவியச் சாயலை வழங்குவதில் வெற்றிபெற்ற இயக்குநர்

இவருடைய முதல் மனைவி நடிகை சோனியா அகர்வால்.இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துவிட்டனர்.

செல்வராகவன் பிறகு கீதாஞ்சலி எனபவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் செலவராகவன் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  விவேகம் டீசர் - கவுன்ட் டவுன் ஆரம்பம்...

அந்த புகைபடத்தினை பார்த்தவர்கள் அவர்களின் கண்களையே நம்பவே முடியவில்லை.

காரணம் குண்டாக இருந்த அஞ்சலி உடல் மெலிந்து ஸ்லிமாக உள்ளார். இவரை அடையாளம் தெரியவில்லை என்று பலர் வியக்கிறார்கள்.

செல்வராகவனின் புகைப்படத்தை ட்விட்டரில் பார்த்த ரசிகர்கள் என்னதான் புகைப்படம் எடுப்பது பிடிக்காது என்றாலும் இப்படியா கொஞ்சம் சிரிங்க சார் என்று தெரிவித்துள்ளனர்.