தீபாவளிக்கு வெளியான நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து வரும் வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.

ஜிஎஸ்டி வரி வசனங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, ‘மெர்சல்’ படத்தின் வசூல் அதிகரித்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

mersal vijay
mersal vijay

இந்த சர்ச்சை தொடங்கியதிலிருந்தே வசனங்கள் அல்லது காட்சிகள் நீக்கப்பட்டு விடுமோ என்று மக்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் பாஜகவின் இந்த எதிர்ப்பு, கருத்து சுதந்திரத்திற்கு விடுக்கும் சவால் என்று அரசியல் கட்சியினர் திரைத்துறையினர் கூறி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனும் மெர்சல் திரைப்படத்தை மற்றொரு முறை தணிக்கை செய்யத் தேவையில்லை என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதே போன்று தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கப் பொதுச்செயலாளரான விஷாலும் மெர்சல் படத்தை மறு தணிக்கை செய்யச் சொல்வது நியாயம் இல்லை என்று கூறி இருந்தார்.

மெர்சல் படம் குறித்தும், அதனுடன் எழுந்த சர்ச்சைகள் குறித்தும் இயக்குனர் சீனு.ராமசாமி மனம் திறந்து பேசியுள்ளார்.

தனது ஒவ்வொரு படத்திலும் ஒவ்வோர் அரசியல் வசனம் பேசி வருகிறார் தளபதி விஜய் . ‘கத்தி’ படத்தில் 2ஜி ஊழல் பற்றிப் பேசினார். ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி குறித்துப் பேசியிருக்கிறார்.

vijay

விஜய் நினைத்திருந்தால் ‘கத்தி’ படத்திலும் சரி, ‘மெர்சல்’ படத்திலும் சரி… அரசியல் சார்ந்த வசனங்களை டைரக்டர்களிடம் நீக்கச்சொல்லி தவிர்த்து இருக்கலாம்.

ஆக, விஜய் அப்படிச் செய்யவில்லை. விருப்பப்பட்டுத்தான் அரசியல் வசனங்களைப் பேசியிருக்கிறார். தீபாவளிக்கு ரிலீஸான ‘மெர்சல்’ வெற்றித் திரைப்படம்தான் என்பதில் சந்தேகமில்லை.

mersal-box

மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் ‘மெர்சல்’ படத்துக்கு இலவச விளம்பரத்தைத் தேடிக்கொடுத்த பி.ஜே.பி-யை நிச்சயம் மனம்திறந்து பாராட்ட வேண்டும்.

‘மெர்சல்’ படத்துக்கு தீபாவளி போனஸாக இந்தியா முழுவதும் விளம்பரம் செய்த பி.ஜே.பி பிரமுகர்களை விஜய் தேடிப்போய் மாலைபோட்டு பாராட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார் இயக்குனர் சீனு.ராமசாமி.