fbpx
Connect with us

Cinemapettai

கடனில் சிக்கித் தவிக்கும் இயக்குனர் சசிகுமார்.. அட! இவருக்கா இந்த நிலைமை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடனில் சிக்கித் தவிக்கும் இயக்குனர் சசிகுமார்.. அட! இவருக்கா இந்த நிலைமை

தமிழ் சினிமாவில் கிராமத்து கதை என்றாலே ஒரு சில வருடங்களுக்கு முன்னால் தேடிப்போய் கமிட் செய்யும் ஹீரோ என்றால் அது சசிகுமார் தான். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வந்த இயக்குனர், நடிகர் சசிகுமார் சொந்தத் தயாரிப்பில் ஈடுபட்டு நொந்த கதை அவருக்கு மட்டுமே தெரியும்.

முதன் முதலில் இவர் இயக்கி நடித்த படம் சுப்பிரமணியபுரம். இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு முத்திரை பதித்த படம் அது. அதன்பிறகு சீரியல்களை இயற்றிக் கொண்டிருந்த சமுத்திரக்கனியை அழைத்து பட வாய்ப்பு கொடுத்து நாடோடிகள் எனும் வெற்றி படத்தை கொடுத்தனர்.

அதேபோல் விஜய் சேதுபதிக்கும் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு சரியாக வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில், தன்னுடைய சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். அதன்பிறகு படத் தயாரிப்பில் இறங்கிய சசிகுமாருக்கு அதிலும் வெற்றியுடன் விருதுகளும் கொட்டிக் கொடுத்தது. இதனால் நம்பிக்கையான தயாரிப்பு நிறுவனமாக மாறியது கம்பெனி புரொடக்ஷன்ஸ்.

ஆனால் நல்லது நடந்தால் கூடவே கெட்டது நடக்கும் என்பதைப் போல, தொடர்ந்து தான் நடிக்கும் படங்களை தயாரித்து தான் அவர் பண்ணிய மிக பெரிய தவறு. மற்ற கம்பெனிகள் கோடிகளில் சம்பளம் கொடுத்து படத்தில் நடிக்க கூப்பிட்டு கொண்டிருந்த காலத்திலும் சொந்த தயாரிப்பில் தான் நடிப்பேன் என கையை சுட்டுக்கொண்டார்.

அன்று விழுந்த சசிகுமார் 30 கோடி கடனில் தவித்து வருகிறார். தற்போது 3.5 கோடி சம்பளம் என்றால் அதில் மூன்று கோடியை கடனாக கட்டி வருகிறார்.

இந்த உலகத்தில் நல்லது நினைப்பவர்களுக்கு மட்டுமே சோதனைகளும் வந்து சேரும் என்பது நிதர்சனமான உண்மை..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top