நடிகர் சூர்யாவை வைத்து பேரழகன் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சசி சங்கர் இன்று காலை கேரளாவில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு வயது 57.

சர்க்கரை நோயாளியான சசி சங்கர், இன்று தனது வீட்டில் சுயநினைவின்று விழுந்து கிடந்ததைப் பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பிரபல இயக்குநர் சத்யன் அந்திக்காடுவிடம் உதவியாளராக இருந்த சசி சங்கர், தனது முதல் படத்திலேயே பிராமணப் பெண் அரபி மொழி கற்றுத் தரும் கதையைத் தேர்வு செய்து இயக்கினார். 1993 ஆம் ஆண்டு இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.