fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யை அட்டாக் பண்றதுக்குத்தான் அந்த பாட்டு வெச்சோம்.. உளறிய இசையமைப்பாளர்.. மாட்டிய இயக்குனர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யை அட்டாக் பண்றதுக்குத்தான் அந்த பாட்டு வெச்சோம்.. உளறிய இசையமைப்பாளர்.. மாட்டிய இயக்குனர்

தமிழ் சினிமாவிலிருந்து பிரிக்க முடியாத நடிகர்களாக உச்சத்தில் இருப்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இருவரும் ஆரம்ப காலகட்டங்களில் போராடிதான் வெற்றிகளை பெற்றுள்ளனர். அப்படி தல அஜித்தின் ஆரம்ப கட்டத்தில் வெற்றி படங்களை கொடுத்தவர் தான் சரண்.

சரணுக்கு உறுதுணையாக இருந்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். இருவரது கூட்டணியில் உருவாகும் படங்களும் பாடல்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வந்த காலகட்டம். அப்போது தல அஜித் வளர்ந்து வரும் நடிகர். தளபதி விஜய்யும் கிட்டத்தட்ட அதே அளவில்தான் இருந்து வந்தார்.

ஆனால் தல அஜித்தை விட அப்போது தளபதி விஜய்யின் படங்களை குடும்பம் குடும்பமாக ரசித்து வந்தனர். தல அஜித் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் அட்டகாசம். அந்த படத்தில் உனக்கென்ன உனக்கென்ன என்ற பாடல் இடம் பெற்றிருக்கும்.

இந்த பாடல் விஜய்யை தாக்குவதற்காக தான் உருவாக்கியதாக இசையமைப்பாளர் பரத்வாஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். இதேபோல் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் சரண் தளபதி விஜய்யின் மீது ஏதோ வஞ்சம் வைத்து பேசுவதைப் போல இதே மாதிரி ஒரு சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார்.

Director-saran

Director-saran

மேலும் பரத்வாஜ் அப்போதைய காலகட்டங்களில் ரசிகர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தற்போதைய சூழ்நிலையில் அந்த பாடல் வெளியாகியிருந்தால் அவ்வளவுதான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இருவரும் தேவையில்லாமல் தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டதால் விஜய் ரசிகர்களிடமிருந்து இவர்களை காப்பாற்றுவது கொஞ்சம் கஷ்டம் தான் என்கிறது கோலிவுட்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top