Videos | வீடியோக்கள்
தளபதி விஜய்யை கழுவி ஊத்தி வீடியோ பதிவிட்ட சர்ச்சை இயக்குனர்.. கடுப்பில் ரசிகர்கள்
இயக்குனர் சாமி என்று சொன்னால் பலர் யாரென யோசிப்பார்கள். எனினும் உயிர், மிருகம், சிந்து சமவெளி, கங்காரு என்றால் அட அவரா என அனைவருக்குமே தெரிந்துவிடும். அந்தளவுக்கு தன் படங்கள் வாயிலாக சர்ச்சையை ஏற்படுத்தியவர். மாதர் சங்கங்களின் எதிர்ப்பு, சினிமாத்துறையில் கடுப்பை சம்பாதித்தவர். இந்நிலையில் இவர் தளபதி விஜய் அவர்கள் பற்றி தரக்குறைவாக பேசி, மோசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் “சினிமாவில் நடிப்பதுடன் நிறுத்திக்கவும், ரசிகர்களை சந்தித்துவிட்டு டெட்டோல் போட்டு கை கழுவுகிறீர், பின் வாசல் வழியாக பணம் வாங்குகபவர். எத்தனை நாள் தமிழகத்தை ஏமாற்றமுடியும். தயவு செய்து நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். கருத்து சொல்ல வேண்டாம்.” என்றெல்லாம் பேசியுள்ளார்.
இந்த நேரத்தில் இவர் ஏன் விஜய் பற்றி பேசவேண்டும், யாரேனும் தூண்டி விடுகிறார்களா ? அல்லது பப்லிசிட்டி கிடைக்கும், அதை வைத்து அடுத்த ப்ரொஜெக்ட் ஓகே செய்யும் திட்டமா என பல நோக்கில் இதை அணுக வேண்டிய சூழல் வந்துள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
