Connect with us
Cinemapettai

Cinemapettai

ranjith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வருடம் பா.ரஞ்சித் டார்கெட்.. ஆர்யா கொடுக்க போகும் குத்து

ரஞ்சித் மிக வேகமாக வளர்ந்து வரும் இயக்குனர் இவர் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கபாலி,காலா போன்ற படங்களை இயக்கியுள்ளார், ரஜினியின் படத்தை இயக்க பல இயக்குனர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் ரஞ்சித்திற்கு இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தது அவரின் திறமை என்றே சொல்லலாம்.

இவரின் அடுத்த படம் யாருடன் என்ன படம் யார் ஹீரோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது இந்த நிலையில் கடந்த வருடம் ஒரு தகவல் வெளியாகியது ஆம் இவர் அமீர்கானுடன் படம் எடுக்க போவதாக அதனால் அமீர்கானுக்கு கதை சொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் பா.ரஞ்சித் எழுதிய வரலாற்று சிறப்புமிக்க இந்திய பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரரின் கதையை 5 இயக்குனர்கள் கொண்டு படமாக்கப்பட இருந்தது. அதில் பா.ரஞ்சித் ஒரு இயக்குனராம்.

amir-ranjith

amir-ranjith

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த வரலாற்று சம்பவத்தை படமாக்கலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது வரை இந்த படத்திற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்யாத நிலையில் இந்த படம் தடை பட்டுள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் விரக்தியடைந்த பா.ரஞ்சித் தற்போது  அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறாராம். குறைந்த பட்ஜெட்டில் அதிக  வசூலை அள்ளும் சிறந்த தயாரிப்பாளர்  பா.ரஞ்சித் என்றே கூறலாம். 5 இயக்குனர்களுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

pa-ranjith

pa-ranjith

ஆர்யா மற்றும் பா ரஞ்சித்தின் காம்போவில் இந்த வருடம் புதிய படம் தொடங்க இருப்பதாக தற்போது கிடைத்துள்ள செய்தி. மகாமுனி முடிந்த கையோடு நடிகர் ஆர்யா இந்தப் படத்தில் பாக்ஸராக களமிறங்க உள்ளார். இந்த படம் நடிகர் ஆர்யாவுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அருண் விஜய் போலவே பாக்ஸராக களமிறங்கியுள்ள ஆர்யாவிற்கு ரசிகர்களின் ஆதரவு மிக முக்கியம் ஏனென்றால் ராஜா ராணி படத்திற்கு பின் எந்த ஒரு படமும் ஹிட் ஆகவில்லை.

salpetta

salpetta

இந்த படத்திற்கு சல்பேட்டா என்று தலைப்பு வைக்கப்பட்டு போஸ்டர் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக ஆர்யா தனது உடலை தயார் செய்து வருகிறாராம். இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு மற்றும் படத்தை பற்றிய செய்திகள் அதிகாரப்பூர்வமாக  விரைவில் வெளிவரும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top