Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

இயக்குனர் ராமின் அடுத்த பட ஹீரோ இவரா? செட் ஆகுமா என ஆச்சர்யத்தில் கோலிவுட்

இயக்குனர் ராம் கற்றது தமிழ் (2007), தங்க மீன்கள் (2013), தரமணி (2017), பேரன்பு (2018) என நான்கு படங்களை இயக்கியுள்ளார். படங்களின் எண்ணிக்கை என்பதனை விட தரத்தின் மீது நம்பிக்கை வைப்பவர். சவரக்கத்தி, சைக்கோ படங்களில் நடித்தும் உள்ளார்.

RJ பாலாஜி ரேடியோவில் பணியாற்றி வந்தவர். சுந்தர் சி ஆதரவுடன் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது காமெடியன் என்ற லிமிட்டை கடந்து ஹீரோ, இயக்குனர் என கலக்கி வருகிறார். இவற்றுடன் கிரிக்கெட் வர்ணனனை என்று செம்ம பிஸி.

rj-balaji-cinemapettai

rj-balaji-cinemapettai

மூக்குத்தி அம்மன் படம் தொடர்ந்து ஹிந்தியில் ஹிட் அடித்த “பதாய் ஹோ” படத்தை தமிழில் “வீட்டுல விஷேஷங்க” என ரீ மேக் செய்யப்போவதாக சொல்லப்படுகிறது

இந்நிலையில் பாலாஜி – ராம் கூட்டணியில் படம் ஒன்று ரெடி ஆக போவதாக கோலிவுட்டில் விஷயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ராம் அவர்கள் கைவசம் வைத்திருந்த கதை ஒன்று மிகவும் பிடித்து போக ஓகே சொல்லிவிட்டாராம்.

தயாரிப்பாளர் மாற்றம் டெக்கினிக்கல் விஷயங்கள் முடிவான பின்பு விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலாஜியின் காமெடியும் கலந்து ராமின் யதார்த்த சினிமாவாக ரெடியாகும் பட்சத்தில் நமக்கு சிறந்த விருந்தாக இப்படம் அமையும்.

Continue Reading
To Top