Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷ் படம் பற்றிய தவறான தகவல்களை யாரும் வெளியிட வேண்டாம் – வேண்டுகோள் வைத்த ராட்சசன் இயக்குனர் ராம்குமார் .
இயக்குனர் ராம்குமார்
2014 இல் விஷ்ணு விஷாலை வைத்து காமடி ஜானரில் முண்டாசுப்பட்டி இயக்கி ஹிட் கொடுத்தவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தன் ஹீரோவுடன் இணைந்து இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் ராட்சசன் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.

Raatchasan vishnu vishal
இவர் அடுத்ததாக தனுஷை இயக்கப்போவதாக விஷ்ணு பேட்டியில் கூறினார். பாண்டஸி ஜானரில் இப்படம் என்றும் கிசுகிசுத்தனர். இந்நிலையில் இப்படத்தின் வாயிலாக மீண்டும் ஹீரோயினாக லட்சுமி மேனன் கம் பேக் கொடுப்பதாக தகவல்கள் பரவியது.

lakshmi menon
இது குறித்து இயக்குநர் ராம்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தித்தாளின் போட்டோவை ஷேர் செய்து, போன்ற தவறான தகவல்களை யாரும் வெளியிட வேண்டாமென வேண்டுகோள் வைத்துள்ளார்.
வணக்கம். ராட்சசனுக்கு பிறகு தனுஷ் அவர்களுடனான திரைப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். அதற்க்குள்ளாகவே கதை நாயகி குறித்தான இது போன்ற தவறான தகவல்களை யாரும் வெளியிட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். நன்றி? pic.twitter.com/rQVsPiYh4S
— Ramkumar (@dir_ramkumar) October 28, 2018
