Tamil Cinema News | சினிமா செய்திகள்
இயக்குனரை மாற்றிய தனுஷ்! யார் அந்த இயக்குனர்?
தமிழ் சினிமாவின் ஒரு வித்தியாசமான காமெடி படத்தை தந்தவர் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமார், முண்டாசுப்பட்டி வெற்றியே இதுவரை சொல்லப்படாத ஒரு வித்தியாசமான காமெடியாக இருந்தது தான். இப்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் அடுத்த படம் ராட்சசன் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் இந்தப் படம் பயங்கர திரில்லர் வடிவில் வந்துள்ளது.

dhanush
ராட்சசன் படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. அமலா பாலுக்கும் நல்ல வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் அமைந்துள்ளதாக சொல்கிறார்கள். முண்டாசுப்பட்டி வெற்றி, ராட்சசன் படமும் திரைக்கு வரவுள்ளது. அடுத்து ராம்குமார் என்ன படம் இயக்குவார் என்று இந்த நிலையில் தனுஷை வைத்து ஒரு கதை சொல்லி அதையும் ஓகே வாங்கியுள்ளார்.
தனுஷ் நடிக்க இருந்த நான்கு படங்களில் இரண்டு படங்கள் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு ராம்குமாரிடம் இணையலாம் என சொல்கிறார்கள். ஆனாலும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிமே தான் வரும். தனுஷுக்கும் கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை.
