“நடிகர் அஜித்துக்கும் எனக்கும் முன் ஜென்ம உறவு இருக்கிறது” என இயக்குநரும், நடிகருமான ரமேஷ் கண்ணா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ரமேஷ் கண்ணா இயக்கிய முதல் படம் “ தொடரும்”. இந்த படத்தில் அஜித் மற்றும் தேவயானி நடித்திருந்தனர். அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் கொண்டிருந்த அஜித், புதுமுக இயக்குநர் என நினைக்காமல் ரமேஷ் கண்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

 

இந்நிலையில் அஜித்தின் அந்த உதவியை நினைவு கூர்ந்துள்ள ரமேஷ் கண்ணா,” எனக்கும் அஜித்துக்கும் போன ஜென்ம பந்தம் இருக்கும் என நான் நினைக்கிறேன். நான் இயக்கிய முதல் படமான தொடரும் படத்தில் அஜித் நடித்தார். அவருடைய நிறைய படங்களில் நான் நடித்திருக்கிறேன்.” என ரமேஷ் கண்ணா உருக்கத்துடன் பேசியுள்ளார்.