விஜய் இயக்குனரை கேவலபடுத்திய போலீஸ்.. அடுத்த நாள் நடந்ததை பாருங்க

தளபதி விஜயின் திருமலை படத்தை எடுத்த இயக்குனர் ரமணா நேற்று முன்தினம் பட்டினப்பாக்கம் சிக்னல் வளைவில் செல்லும்போது போலீசாரால் பிடிக்கப்பட்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக விசாரித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஆதி, சுள்ளான் போன்ற படங்களையும் அவர் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணையின்போது தான் விதிகளை மீறவில்லை என்று அவர் வாதாடியுள்ளார். அவர்கள் வண்டியின் சாவியை வைத்துக்கொண்டு அபராதம் விதித்துள்ளனர். அப்பொழுது உதவி ஆய்வாளர் குமார் ‘என்னை பார்த்து டேய் தள்ளி நின்னு பேசினா உன்னோட நோய் எனக்கும் தொட்டிக்கும்’ என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ரமணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். மிகவும் மனமுடைந்த இயக்குனர் ரமணா வீட்டிற்கு சென்ற பின் தன் மகளை வைத்து அபராதத்தை கட்டியுள்ளார்.

ஆனால் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் அவர் கூறிய வார்த்தை தன் மனதை புண்படுத்தியதாக வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வருத்தம் தெரிவித்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார், அந்த பதிவினை பார்த்த பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர்.

இதனால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று இயக்குனர் ரமணா தனது பதிவில் காவல் துறையினர்  விசாரணைக்குப் பின் செய்த தவறுக்கு தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக கூறி உள்ளார்.  விசாரணை நடத்திய ஹரி கிருஷ்ணமூர்த்தி, ஷோபனா காவல்துறையினருக்கு நன்றிகள் தெரிவித்துள்ளார்.

இது போன்ற தவறுகள் இனி நடக்காது என்றும், துணை கமிஷனர் அப்துல்லா தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சினிமா பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் செய்த தவறை திருத்திக்கொண்டு காவல்துறையினருக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment