Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயன் ராஜேஷ் இணைந்துள்ள படத்தின் கதை மெகா ஹிட் ஆன சூப்பர்ஸ்டார் படத்தின் ரீமேக்கா.? செம்ம மாஸ் தகவல்

sivakarthikeyan next movie

Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் ராஜேஷ் இணைந்துள்ள படத்தின் கதை மெகா ஹிட் ஆன சூப்பர்ஸ்டார் படத்தின் ரீமேக்கா.? செம்ம மாஸ் தகவல்

சிவகார்த்திகேயன் ராஜேஷ் இணைந்துள்ள படத்தின் கதை

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொடங்கிய தனது வாழ்க்கையை தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் கால் பதித்து தற்போது மிக வேகமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார் இவர் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

அதுவும் சமீபகாலமாக முன்னணி நடிகைகளோடு ஜோடிபோட்டு நடித்துவருகிறார், இப்படி பல படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் படத்தில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ராஜேஷ் இயக்கும் திரைப்படம் தான்,  இந்த திரைப்படத்தில் தான் நயன்தாரா மீண்டும்  சிவகார்த்திகேயனுடன்  ஜோடி சேர்ந்துள்ளார், இயக்குனர் ராஜேஷ் எப்பொழுதும் காமெடியாக படம் எடுப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதனால் இந்த திரைப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது இந்த நிலையில் தற்போது சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படமான மன்னன் படத்தின் ரீமேக்தான் இந்த படம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது இது முழு படத்தின் ரீமேக்காக அல்லது படத்தின் முக்கியமான கான்செப்ட் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top