Connect with us
Cinemapettai

Cinemapettai

bahubali-56

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாகுபலி வசூலை மிஞ்சும் அடுத்த படம் இது தான்.. அடித்து கூறும் தயாரிப்பாளர்!

உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த பிரம்மாண்டமான படைப்பான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பெருமைக்குரியவர் தான் ராஜமவுலி.

எனவே ராஜமவுலி தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் RRR படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார், இந்தப்படத்தின் தயாரிப்பாளர் தம்மரெட்டி பரத்வாஜ்.

ஏனென்றால் பாகுபலி படமானது ஒரே வாரத்தில் 400 கோடி வசூலை தட்டிச்சென்றது.

ஆனால் RRR படம் இந்த சாதனையை முறியடித்து, ஒரே வாரத்தில் 500 கோடி வசூலை அள்ளும் என்று படத்தின் தயாரிப்பாளர் தம்மரெட்டி பரத்வாஜ் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆரின் கெட்டப்பை அவருடைய பிறந்த நாளன்று படக்குழு வெளியிட்டு, RRR படம் நிச்சயம் வேற லெவலுக்கு இருக்கும் என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியது.

RRR-cinemapettai

RRR-cinemapettai

Continue Reading
To Top