செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சிவகார்த்திகேயன், சூரியுடன் மீண்டும் கூட்டணி.. கொக்கி போடும் பிரபல இயக்குனர்

மெரினா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சிவகார்த்திகேயன் அடுத்து 3 படத்தில் காமெடியனாக நடித்தார். அதன்பின், சூரியுடன் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை பொன்ராம் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்சன் எடிட் செய்திருந்தார். டி. இமானின் இசையில் அமைந்த அனைத்து பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது.

7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தைக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இப்படம் சிவகார்த்திகேயனுக்கும், ஸ்ரீ திவ்யாவுக்கும், சூரிக்கும் நல்ல பிரேக் கொடுத்த படமாக அமைந்தது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியுடன் மீண்டும் இணைந்தார் பொன்ராம். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ராஜ்கிரண் தாத்தா கேரக்டரில் நடித்து அசத்த்தியிருந்தார். இப்படத்திலும் அதே தொழில் நுட்பக் கலைஞர்கள்தான் பணியாற்றியிருந்தனர். டி.இமானின் இசையில் அமைந்த ஒவ்வொரு பாடலும் சூப்பட் ஹிட்டாகி ரசிகர்களின் பேவரெட்டாக அமைந்தன.

ரூ.22 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் 50 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபீஸில் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 வது முறையாக சிவா, சூரி, பொன்ராம் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்தனர். அதன்படி, கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் சீமராஜா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்தது.

இதையடுத்து பொம்ராம், எம்.ஜி.ஆர் மகன், டிஎஸ்பி உள்ளிட்ட படங்களை இயக்கினார். சிவாவும், மிஸ்டர் லோக்கல், வேலைக்காரன், அயலான், மாவீரன் உள்ளிட்ட படங்களில் பிஸியாகினார். தற்போது அவர் நடிப்பில் கமல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படம் உருவாகியுள்ளது. இப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டரில் ரிலீசாகியுள்ளது.

மீண்டும் இணையும் SK, சூரி கூட்டணி

இந்த நிலையில், பொன்ராம் படத்தில் மீண்டும் சூரி, சிவா இருவரும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது. பொன்ராம் படங்களில் காமெடி இருக்கும். சமூக சிந்தனை இருக்கும்.அதனால் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும். இதனால் அவர் அனைவராலும் கொண்டாடப்படுகிறார். அவரது படமும் ரசிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டியளித்த பொன்ராம், ”மீண்டும் சிவா, சூரி கூட்டணியில் ஒரு படம் எடுக்கும் திட்டம் இருப்பதாகவும், அதற்கான சூழல் அமைந்தால் நிச்சயம் படம் உருவாகும். ஆக்சன் படங்கள் எடுப்பது எளிது. ஆனால், காமெடி படங்கள் எடுப்பது சவாலான விஷயம்” என்று தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து அடுத்து இணையவுள்ள படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2வது பாகமாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

கைகொடுக்குமா காலம்

ஆனால் அன்று சிவாவின் கால்ஷீட் பெற்று படத்தை இயக்கிய பொன்ராம், இன்று ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட முன்னணி இயக்குனருடன் அவர் பணியாற்றி வருவதாலும், விடுதலை படத்திற்குப் பின் சூரியும் ஹூரோவாக நடித்து வருவதாலும், அதற்கான நேரமும் காலமும் பொன்ராமுக்கு கைகூடுமா என கேள்வி எழுந்தாலும், அவரது திறமைக்கு அவர் நினைத்தது நிச்சயம் நடக்குமென ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News