Tamil Cinema News | சினிமா செய்திகள்
அவசர அவசரமாக கிராமத்து இயக்குனருடன் கூட்டணி போட்ட சூர்யா.. எல்லாம் ஒரு ஹிட்டுக்காக தான்!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான அவதாரம் எடுப்பதில் சூர்யாவை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை என்றே கூறலாம். ஆனால் கடந்த வருடம் சூர்யாவிற்கு படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.
சூர்யாவிற்கு இந்த வருட தொடக்கமும் சறுக்கலாக இருந்தது. பல பிரச்சனைகளை தாண்டி இவர் தயாரிப்பில் பொன்மகள் வந்தாள் OTT-யில் வெளியிடப்பட்டது. இதற்கு பல எதிர்ப்புகள் தியேட்டர் உரிமையாளர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.
ஆனால் சூர்யா தனது முடிவில் மிகவும் தெளிவாக இருந்ததால் வெளிவந்த வெற்றிநடை போட்ட ‘பொன்மகள் வந்தாள்’ சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.
இந்த வருடம் சூரரைப்போற்று வெளிவர காத்துக்கொண்டிருந்தது. ஆனால் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் விரைவில் இந்த படம் விரைவில் வெளிவரும், பிரம்மாண்ட வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார் என்பது நமக்கு தெரிந்தது தான். அதாவது சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் அருவா என்ற படம் கைவிடப்பட்டது. பின்னர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
தற்போது எங்க வீட்டுப் பிள்ளை இயக்குனர் பாண்டியராஜன் சூர்யாவை சந்தித்ததாகவும், அவருடன் கூட்டணியில் படம் எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
