இயக்குனர் பாண்டிராஜ் பசங்க 2 மற்றும் கதகளியின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் நேற்று பத்திரிகையாளர் சந்தித்து நன்றி தெரிவித்தார். கதகளி மற்றும் பசங்க 2வின் வெற்றி என்னை இன்னும் பொறுப்புள்ளவனாக மாற்றியுள்ளது.

அடுத்து இது தான் படம் என்று நான் என்றுமே யோசித்தது கிடையாது. கதைக்கு யார் பொருத்தமோ அவர்களை தான் தேர்வு செய்வேன், ஒரு நடிகருக்காக கதை எழுத வேண்டும் என்றால் எனக்கு தெரியாது என்று கூறினார்.

அதிகம் படித்தவை:  ப்ரேமம் ரீமேக்கில் சிம்பு, முதன் முதலாக உண்மையை உடைத்த இயக்குனர்?

மேலும் பத்திரிகையாளர் ஒருவர் சிவகார்த்திகேயனை வைத்து எப்போது படம் பண்ணுவீர்கள் என்று கேள்விக்கு என் Pasanga Production அவரை வைத்து படம் எடுக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை, அவர் ஏகப்பட்ட விரல்கள் நீட்டுகிறார் என்று கலகலப்பாக கூறினார்.