Videos | வீடியோக்கள்
நட்சத்திரம் நகர்கிறது வைரலாகும் ட்ரெய்லர்.. பட்டையை கிளப்பிய பா.ரஞ்சித்

முதலிரவில் பெண் தலைகுனிந்து வந்து பழகிய தமிழ் சினிமாவில் இந்த ஆட்டம் நிச்சயம் வியப்பை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு அட்டகத்தி படத்திற்கு பிறகு இந்த காலத்து காதல் கதையை வித்தியாசமாக காட்ட நினைத்த இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.
இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இருவரும் லீட் ரோலில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்கான குரல் அதிகம் ஒலித்தது.
Also Read: அசால்டாக செய்து முடிக்கும் பா. ரஞ்சித்!
அதே போன்று தான் இந்தப் படமும் இருக்கும் என நினைத்தவர்களுக்கு இந்த ட்ரைலரைப் பார்த்த பிறகு, பா. ரஞ்சித் இந்த படத்தை வேறு ஒரு கோணத்தில் இயக்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. நட்சத்திரம் நகர்கிறது படத்தில் காதலுக்கு தனி மொழி இலக்கணத்தை கொடுத்திருக்கிறார் பா. ரஞ்சித்.
தாலி கட்டினால் மட்டும் தான் காதலுக்கு மதிப்பு கிடைக்குமா!. எதற்காக ஒருத்தரை காதல் செய்யும் அளவுக்கு பிடிக்கிறது. காதலிப்பவர்களுக்கு என்னென்ன விருப்பங்கள் இருக்கிறது. ஆண்-பெண் ஈர்ப்பிற்கு பின்னால் என்னென்ன அர்த்தம் இருக்கிறது.
Also Read: பிரபல நடிகரை வைத்து சொல்லப்போகும் பா ரஞ்சித்!
காதல் என்பது ஆண்-பெண் இருவருக்கும் மட்டும் வருவதல்ல. பெண்-பெண், ஆண்-ஆண் இருவருக்கும் வரலாம். அந்தக் காதலை மட்டும் இந்த சமூகம் ஏன் அருவருப்பாக பார்க்கிறது. மேலும் காதலுக்கும் வயதிருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
காதல் என்பது அவ்வளவு ரொமான்டிக்கான விஷயம் ஒன்றுமில்லை. இவ்வளவெல்லாம் பேசிய ட்ரெய்லரில் கடைசியில் ‘காதல் என்றாலே வழி’ என்பதை கதாநாயகன் வாயிலேயே சொல்ல வைத்திருக்கிறார் பா ரஞ்சித்.
தற்போது இந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ட்ரைலரை பார்த்த பிறகு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது.
Also Read: விக்ரமிற்கு பின் வரிசை கட்டி நிற்கும் இயக்குனர்கள்!
