Connect with us
Cinemapettai

Cinemapettai

தனது அடுத்த பட ரிலீசுக்கு தயாராகும் பா.ரஞ்சித்.. இது வித்தியாசத்தின் விதை

pa-ranjith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனது அடுத்த பட ரிலீசுக்கு தயாராகும் பா.ரஞ்சித்.. இது வித்தியாசத்தின் விதை

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் திறமையுள்ள இளம் இயக்குனர்கள் எளிதாக பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சூப்பர்ஸ்டாரை வைத்து தொடர்ச்சியாக இரண்டு படங்களை இயக்கியவர் பா. ரஞ்சித்.

இதனால் பெரிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், கடந்த வருடம் பரியேறும் பெருமாள் என்ற தரமான கதையம்சம் கொண்ட திரைப்படத்தைதனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்து இருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அட்டகத்தி தினேஷ் வைத்து தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தினேஷுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார்.

இந்த படத்தை ரஞ்சித்-ன் உதவி இயக்குனரான ஆதியன் ஆதிரை என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் டேன்மா என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகமாக இருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த இருப்பதாகவும், இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிடப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மற்றுமொரு சிறப்பான படைப்புக்காக காத்திருப்போம்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top