Connect with us

Cinemapettai

சந்திரமுகி 2-ல் ரஜினி நடிக்கவில்லை.. அவருக்கு பதிலாக நடிக்க போகும் பிரபல நடிகர்

chandramukhi-rajini

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சந்திரமுகி 2-ல் ரஜினி நடிக்கவில்லை.. அவருக்கு பதிலாக நடிக்க போகும் பிரபல நடிகர்

ரஜினி, நயன்தாரா, ஜோதிகா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து வசூலில் தமிழ் சினிமாவை மிரள வைத்த திரைப்படம் சந்திரமுகி. பி. வாசு இயக்கிய இந்தப் படம், பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.

சிறிது இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்த இந்த படத்துக்கு மாபெரும் வரவேற்புக் கிடைத்தது. முருகேசன் கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா.
தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக பி. வாசு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆனால் சந்திரமுகி 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். மேலும் பி. வாசு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை கன்னடத்தில் அப்த ரக்ஷக என்ற பெயரில் இயக்கினார். அந்த படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது அந்த கதையை தமிழுக்கு ஏற்றார்போல் கொஞ்சம் மெருகேற்றி பிரபல நடிகரிடம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் பெரும்பாலும் ராகவா லாரன்ஸ் இருக்கவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே பி. வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விரைவில் இந்தப் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என பி. வாசு தரப்பில் செய்திகள் கசிந்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top