Connect with us

Cinemapettai

3-வது படத்திற்கே கோடிகளை கொட்டிக் கொடுக்கும் சன் பிக்சர்ஸ்.. அசுர வளர்ச்சியில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்!

vijay-nelson-thalapathy65

Tamil Cinema News | சினிமா செய்திகள்

3-வது படத்திற்கே கோடிகளை கொட்டிக் கொடுக்கும் சன் பிக்சர்ஸ்.. அசுர வளர்ச்சியில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்திற்கு சொந்தக்காரரான தளபதி விஜய்யை இயக்கும் இயக்குனர்கள் வேகமாக உச்சம் பெறுவது வழக்கம். அந்த வரிசையில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து மூன்றாவது படத்தை இயக்கவிருக்கிறார் நெல்சன் திலீப் குமார்.

ஆகையால் தளபதி விஜய், நெல்சன் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘தளபதி65’ படத்தை இயக்குவதற்கு 6 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தற்போது தகவல்கள் கசித்துள்ளது. இவருடைய மூன்றாவது படத்திலேயே இவ்வளவு சம்பளம் வாங்குவது கோலிவுட்டையை அதிர்ச்சியில் ஆழ்த்திள்ளது.

மேலும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார், ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர்1, ஏர்டெல் சூப்பர் சிங்கர், பிக் பாஸ் என பல ரியாலிட்டி ஷோக்களை இயக்கி அதன்மூலம் பல பிரபலங்களின் அறிமுகத்தை பெற்று அதன் பின்னரே தமிழ் சினிமாவில் இயக்குனராக கால்பதித்தார்.

அதுமட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளராக பல படங்களில் பணியாற்றி உள்ளார். அதன்பின் இவர் தமிழ் சினிமாவில் 2010ஆம் ஆண்டு வெளியான சிலம்பரசன் நடித்த ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை முதன்முதலாக இயக்கினார்.

அதன்பின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வெளியான சூப்பர் ஹிட் படமான ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் தனது திரை வாழ்க்கையில் வெற்றியை ருசிக்க தொடங்கினார்.

nelson-cinemapettai

ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் தளபதி விஜய்யை இயக்க விருந்த நிலையில், அவர் சொன்ன கதை தளபதி விஜய்க்கு பிடிக்காததால் நெல்சன் திலீப்குமார் கூறிய கதையைக் கேட்டு அவருடன் கூட்டணி அமைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top