இளைய தளபதி விஜய் மிகவும் அமைதியானவர். ஆனால், ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் என்று சொன்னால் போதும் தூள் கிளப்புவார்.

அந்த வகையில் விஜய்க்கு முதன் முதலாக ஒரு மாஸ் குத்து பாட்டு ஹிட் என்றால் அது யூத் படத்தில் இடம்பெற்ற ‘ஆல்தொட்டபூபதி’ பாடல் தான்.

இந்த படத்தை வின்செண்ட் செல்வா இயக்கியிருந்தார், இதே படத்தில் உதவி இயக்குனராக வேலைப்பார்த்தவர் தான் மிஷ்கின்.

முதலில் ‘ஆல்தொட்டபூபதி’ பாடலே படத்தில் இல்லையாம், வாலி எழுதிய ஒரு பாடல் தான் இருந்ததாம், ஆனால், கடைசி நேரத்தில் வாலி எழுதியதை மணிசர்மாவிடம் (இசையமைப்பாளர்) இருந்து மறைத்து கபிலன் எழுதிய ‘ஆல்தொட்டபூபதி’ பாடலை கொடுத்து மிஷிகின் இசையமைக்க வைத்து, சங்கர் மகாதேவனை பாடவும் வைத்துவிட்டாராம்.

தயாரிப்பாளர் அனைவரும் இவரை திட்ட, வின்செண்ட் செல்வா மட்டும், சூப்பர்டா..கலக்கிட்டா, இது தான் நல்லா இருக்கு என கூறினாராம்.