fbpx
Connect with us

Cinemapettai

அரபு குதிரை போன்ற ஹீரோயினுடன் தன் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போகும் மிஷ்கின்

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

அரபு குதிரை போன்ற ஹீரோயினுடன் தன் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போகும் மிஷ்கின்

சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமானவர் மிஷ்கின். இயக்கம் மட்டுமன்றி சில நாட்களாக நடிப்பிலும் கலக்கி வருகிறார். இதோடு அல்லாமல் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துவிட்டார். மிஷ்கின் தனது தம்பி ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் ‘பிதா’ படத்தை தயாரித்து வருகிறார்.

இதுவரை சமூக வலைதளம் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் முதல்முறையாக ட்விட்டர் தளத்தில் சமீபத்தில் இணைந்து. @DirectorMysskin என்ற பெயரில் இவருடைய ட்விட்டர் கணக்கை தொடங்கினார்.

விஷாலுடன் துப்பறிவாளன் 2 படத்தில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லாக் டவுன் முடிந்த பின் இவரது புதிய ப்ராஜெக்ட்டில் சிம்பு மற்றும் வடிவேலு இணைவதாக சொல்லப்பட்டது. ஹீரோயின் ஸ்ருதிஹாசன் என்றனர் சிலர். ஆனால் இது வெறும் வதந்தியே.

இந்நிலையில் தான் இயக்கும் புதிய பட அறிவிப்பு ட்விட்டரில் செப்டம்பர் 20 அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

director myskkin status

எனினும் அப்படத்தின் விவரத்தை நம் கோலிவுட் பட்சிகள் கண்டு பிடித்துவிட்டனர். ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்திற்காக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கப்போகிறாராம். இப்படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

காத்திருப்போம் அதிகார பூர்வ அறிவிப்புக்காக.

Continue Reading
To Top