fbpx
Connect with us

Cinemapettai

சாதி சண்டையை கிளப்பி விடுவதே இவர்தான்.. பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய இயக்குனர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சாதி சண்டையை கிளப்பி விடுவதே இவர்தான்.. பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய இயக்குனர்

இயக்குனர் பா. ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி விரைவில் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். இருந்தும் அவருடைய படங்கள் அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மையப்படுத்தியே கதைகள் அமைந்திருக்கும்.

இதனாலேயே இவர் சாதி இயக்குனர் எனவும் வெகு சிலரால் அழைக்கப்பட்டு வருகிறார். சமீப காலமாக அரசியல் குறித்த நிலைப்பாடுகளிலும் தொடர்ந்து தன்னுடைய கருத்துகளை வெளியிட்டு வரும் பா. ரஞ்சித், ராஜராஜ சோழன் பற்றிய கருத்து ஒன்றை கூறி மக்களிடமிருந்து வெறுப்பை சம்பாதித்தார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய துணை இயக்குனர்களை சாதி மையப்பட்ட கதைகளை தேர்வு செய்து அதற்கு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அந்தவகையில் வெளியான பரியேறும் பெருமாள், குண்டு போன்ற படங்களும் அடங்கும்.

அவராகவே அவர்களின் சமூகத்தின் நிறம் நீலம் என குறிப்பிடும்படி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு நீலம் புரோடக்சன்ஸ் என பெயர் வைத்துள்ளார். சமீபத்தில் பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் அவர்கள் பாரதத்தின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டினார்.

தனது ட்விட்டரில் அவர் கூறியதாவது, குறிப்பிட்ட ஊர்களில் உள்ள சமூகத்தின் பெண்களை காதலிக்கும்படி காட்டிவிட்டீர்கள் எனும், இப்போது மயிலாப்பூர் மதுரை போன்ற இடங்களிலும் இதே போன்ற காதல் காட்சிகளை காட்டவும் வஞ்சப்புகழ்ச்சியணி கூறியுள்ளார்.

சாதியே வேண்டாம் என இந்த காலத்து இளைஞர்கள் இருக்கும்போது மீண்டும் சாதியை மையப்படுத்தி படம் எடுப்பது தேவையா எனவும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top