News | செய்திகள்
அன்று தனி ஒருவன் சக்ஸஸ் மீட்டில் பேசியதற்கு இன்று மன்னிப்பு கேட்ட இயக்குனர் மோகன் ராஜா.
CISFF – சர்வதேச குறும்பட விழா சென்னையில் பிப்ரவரி 18 முதல் 24 வரை நடக்க இருக்கிறது. இது ஐந்தாவது பாதிப்பாகும். இதற்கான பத்திரிக்கையளார் சந்திப்பு நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் மோகன்ராஜா, மதன் கார்க்கி, நடிகர் விவேக் பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டார்.

CISFF
அங்கு இயக்குனர் மோகன் ராஜா பேசியதன் சிறு தொகுப்பு ..
“இந்த நிகழ்வில் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். ‘தனி ஒருவன்’ படம் பெரிய ஹிட். அதைவிட அந்தப் படத்தின் சக்ஸஸ் மீட் மிகப்பெரிய ஹிட். அதற்கு முக்கியகாரணம் அந்த மேடையில் நானும் என் தம்பியும் உணர்ச்சிவசப்பட்டு அழுத சம்பவம். அதனாலே அந்த வெற்றிவிழா வைரல் ஆனது. இதே மேடையில்தான், தனி ஒருவனின் அந்த சக்சஸ் மீட்டும் நடந்தது.

தனி ஒருவன் டீம்
அன்று உணர்ச்சிப்பூர்வமாக பேசிக்கொண்டிருந்தபோது நிறையப் பேர் கைதட்டி என் உணர்வை இன்னும் தூண்டிவிட்டார்கள். அந்த வேகத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வார்த்தை பேசிவிட்டேன். அன்று நான் சொன்னது சரி, தவறு என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், அது என் மனசுக்குள்ளே கடந்த மூன்று வருடங்களா உறுத்திக்கொண்டே இருந்தது.

Thani Oruvan
‘நேத்து ஷார்ட் ஃபிலிம் எடுக்க வந்தவங்களாம் படம் பண்ணும்போது நாம பண்ணலயே.’ இதுதான் அன்று நான் பேசிய வார்த்தை. அதுக்கும் அன்னைக்கு நிறையப் பேர் கைதட்டுனாங்க. ஆனா, பிறகு நான் பேசியதைப் பார்க்கையில் எனக்குள்ளேயே பெரிய கில்ட்டி ஃபீலை தந்துச்சு. அவசரப்பட்டு ஏதோ பேசிட்டோமோனுகூட தோண ஆரம்பிச்சது. ‘நேத்து ஷார்ட் ஃபிலிம் எடுக்க வந்தவங்களை நம்புறாங்க, நம்மலை நம்பலயே’னு நாம பேசுனதை எங்கேயவாது கார்த்திக் சுப்புராஜ் பார்த்தால் தப்பா நினைப்பாரோனுகூட தோணிட்டே இருந்துச்சு. இன்னைக்கு சினிமாத் துறைக்கு வர்றவங்க முன் நானேல்லாம் ஒண்ணுமே கிடையாது. என்னை அறியாமல் அந்த வார்த்தையே சொன்னதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
நான் படிக்கும் காலத்தில் பம்பாயில் ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நடக்கும். அதைப் பாக்க ஓடியிருக்கேன். உண்மையில் என் பார்வையை விசாலப்படுத்தியது அந்த ஷார்ட் ஃபிலிம்களும் இன்டர்நேஷனல் மூவிகளும்தான். ஒரு நாளைக்கு ஏழு படங்கள் பார்ப்பேன் அப்படிப் பார்த்ததால்தான் இன்னைக்கு இந்த இடத்துக்கு வந்துருக்கேன்.
