இயக்குனர் மணிரத்னம் தற்பொழுது மல்ட்டி ஸ்டார்களை வைத்து படம் இயக்குகிறார் இந்த படத்தில் சிம்பு,விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துவருகிறார் படத்தின் டைட்டில் செக்க சிவந்த வானம்.

CCV

இந்த படத்தின் கதையானது தொழிற்ச்சாலை கழிவுகளால் ஏற்ப்படும் பிரச்சனைகளை பற்றி பேச இருப்பதாகவும் இதில் சிம்பு இன்ஜினீயராகவும் விஜய் சேதுபதி போலிஸ் கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதையடுத்து படத்தில் வில்லன் யார் என்று தகவல் வெளிவந்துள்ளது ஆம் படத்தின் வில்லன் வேறயாரும் இல்லை நம்ம அரவிந்த்சாமி மற்றும் அருண் விஜய் இருவரும்தான் என கூறுகிறார்கள்.

arun-vijay

அரவிந்த்சாமி தனி ஒருவன் மற்றும் போகன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திருப்பார், அதேபோல் அருண் விஜய் என்னை அறிந்தால் அஜித்திற்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.