காக்கா முட்டைன்னு ஒரு சூப்பர் படத்தை எடுத்து விருதெல்லாம் வாங்கிய இயக்குனர் மணிகண்டன் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார். ஆனால், விநியோகஸ்தர்கள் ஹாப்பியா இல்லை, அண்ணாச்சி.

ஏன் தெரியுமா?

கமர்சியல் எனப்படும் மசாலா தன்மை இவர் படத்தில் குறைகிறதாம். என்னதான் இவர் படம் சூப்பராக இருந்தாலும் மசாலாத்தனமாய் இல்லாததால் கொஞ்சம் ஆர்ட் வாடை அடிக்கிறது. அதனால் மசாலா விரும்பி ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து எட்டிப்பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என்று விநியோகிஸ்தர்கள் தரப்பு சொல்லுதாம்.

நான் எடுத்தா நல்ல படத்தைதான் எடுப்பேன்னு கமிட்மெண்ட்டோடு இருக்கிற மணிகண்டன், தன் ஆண்டவன் கட்டளை படத்துக்கு பின் கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார்.

ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய்சேதுபதி, ரித்திகாசிங், யோகிபாபு என்று ஜாலியாக மெஸேஜ் சொன்னபோதும், இன்னும் மசாலா வேணும்ன்னு சொல்ல, கடுப்பாகி, ஈராஸ் தயாரிக்கவிருந்த ‘கடைசி விவசாயி’ படத்தையே டிராப் பண்ணிட்டதாக தகவல்.

ஏதேனும், கொஞ்சம் காம்ப்ரமைஸ் ஆகி படம் ஆரம்பிக்கப்படுமான்னு, பாப்போம்.