India | இந்தியா
பாஹத் பாசில் நடிப்பில் ஐ போனில் எடுக்கப்பட்ட மெர்சலான திரில்லர்- C U Soon திரை விமர்சனம்
பாஹத் பாசில் மற்றும் நஸ்ரியா நசீம் தயாரிப்பில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள படம் C U SOON
கொரானா லாக் டவுன் சமயத்தில் இயக்குனர் மகேஷ் நாராயணனின் சோதனை முயற்சி தான் இப்படம். கம்ப்யூட்டர் சுகிறீன் சினிமா என்ற ஜானரில் அடங்கும் . ஏற்கனவே SEARCHING , UNFRIENDED போன்ற படங்கள் இது போல வெளியாகி நல்ல ஹிட் ஆனவை.
கதை – து பாயில் வசிக்கும் ஜிம்மி குரியன் (ரோஷன் மாத்தியூ) என்ற பேங்க் ஆஃபீஸ்ர் tinder என்ற டேட்டிங் தளம் வாயிலாக அணு செபாஸ்டின் (தர்ஷனா ராஜேந்திரன்) என்ற பெண்ணுடன் அறிமுகமாகிறார். பின்னர் Hangouts இல் சாட்டிங் Google Duo.வில் வீடியோ கால் என செல்கிறது இவர்களின் காதல்.
அவளின் பிறந்தநாளன்று அமெரிக்காவில் இருக்கும் தன் அம்மாவையும் கான்பெர்ன்ஸ்சில் அழைத்து திருமணம் செய்ய விருப்பம் கேட்கிறான் ஹீரோ. ஜிம்மியின் அம்மா கேரளாவில் உள்ள கெவின் (பாஹத் பாசில்) என்ற உறவினரை அழைத்து இவளை பற்றி இணையத்தில் ஆராய சொல்கிறாள். அவனும் modem ip வைத்து ட்ராக் செய்து நல்ல பெண் தான் என சொல்லிவிவிடுகிறான்.
ஒரு நாள் அப்பா அடித்து துன்புறுத்துவதாக சொல்ல,. ஜிம்மி அவளை வீட்டுக்கு அழைத்து வருகிறான். அவளின் பாஸ்போர்ட் இல்லாததன் காரணத்தால் திருமணம் செய்ய முடியாமல் போகிறது.
ஒரு நாள் வழியில் அவள் அப்பாவை சந்திக்க அவனிடம் பேசுகிறான். அனுவின் நம்பரை தருகிறான். வீட்டிற்கு திரும்பியதும் அணு அங்கில்லை. உடனே கெவினுக்கு போன் செய்து உதவி கோருகிறான்.
ஒருபுறம் கெவின் துப்பறிய மறுபுறம் போலீஸ் ஜிம்மியை கைது செய்கிறார்கள் ஒவ்வொரு மர்ம முடிச்சியாக அவிழ்க்கிறான் கெவின். வீட்டு வேலை செய்ய ஏஜெண்சி வாயிலாக வரும் அணு, எவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறாள், அங்கு என்ன என்ன கொடுமைகள் நடக்கிறது. அதில் இருந்து தப்பிக்க அங்கு கிடைத்த லேப் டாப் கொண்டு செய்த திட்டம், அடுத்ததாக ஜிம்மி மீது காதல் வயப்படுவது. பின்னர் தான் தப்பிப்பது மட்டுமன்றி மற்ற பெண்களை அவள் காப்பாத்த திட்டம் தீட்டுவது. இரு நாட்டு அரசு தரப்பும், மீடியாவும் இந்த சம்பவத்தை எப்படி சித்தரிக்கின்றனர் என்பது மீதி கதை.
சினிமாபேட்டை அலசல் – இப்படி ஒரு துப்பறியும் த்ரில்லரை துளியும் பிசிறடிக்காமல் செல் போனில் படம் பிடித்துள்ளனர் இந்த படக்குழு என்பது மிக பெரிய ஆச்சர்யம். இப்படத்தை எழுதி, இயக்கி, எடிட் செய்த இயக்குனர் மகேஷ் நாரயணனுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். நடிப்பில் அனைவரும் கலக்கி விட்டனர். கோபி சுந்தரின் பின்னணி இசை பக்க பலம்.
லாக் டவுனில் இந்த முயற்சியை எடுத்து மட்டுமன்றி, கேரளாவில் இருந்து பெண்களை துபாயில் விபசாரத்தில் இடுப்பதும் கும்பல் பற்றியும், அங்கு பெண்கள் சந்திக்கும் துயரங்களையும் துகில் உரித்து காமித்துள்ளனர்.
98 நிமிடங்கள் ஓடும் நேரம் உள்ள படமான இது துளியும் போர் இல்லாமல் செல்கிறது.
இந்த சி யூ சூன் படத்தை நீங்களும் சீக்கிரம் பாருங்கள்.
சினிமாபேட்டை ரேட்டிங் – 3.75 / 5
