fbpx
Connect with us

Cinemapettai

கமலுடன் இணைந்த இயக்குனர் மகேந்திரன்

கமலுடன் இணைந்த இயக்குனர் மகேந்திரன்

kamal-haasan-mahendranவிக்ரம் பிரபு அறிமுகமான ‘கும்கி’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பெரிய வெற்றிகளை கொடுக்காவிட்டாலும் நிதானமாக தன் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறினார் விக்ரம் பிரபு.

இவர் நடித்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ள ‘வாகா’ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவ வீரருக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவருக்கும் ஏற்படும் காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ரான்யா ராய் நடித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் சென்னை சத்யம் திரையரங்கில் இன்று வெளியாகவுள்ளது. கமல்ஹாசன் வெளியிட தெறியில் வில்லனாக கலக்கிய இயக்குனர் மகேந்திரன் பெற்றுக் கொள்ளவிருக்கிறாராம்.

ரஜினி, விஜய்யுடன் இணைந்த இவர், பாடல்கள் வெளியீட்டு விழாவில் கமலுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top