Connect with us

Cinemapettai

பையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.. லிங்குசாமி வெளியிட்ட தகவல்

karthi-paiya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.. லிங்குசாமி வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி இயக்குனர் என பெயர் எடுத்தவர் லிங்குசாமி. ஆனால் தற்போது சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் லிஸ்டில் இருந்து மிகவும் தூரத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளார். அதற்குக் காரணம் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வெளியான அஞ்சான் படம் சறுக்கியது தான்.

சூர்யா மிகவும் ஸ்டைலிஷாக நடித்த அஞ்சான் படம் கதை சரியில்லாத காரணத்தினால் தோல்வியை தழுவ நேரிட்டது. ஆனால் அதற்கு முன் லிங்குசாமியின் படங்கள் தரமானதாக இருக்கும். உதாரணமாக ரன், ஆனந்தம், பையா, வேட்டை போன்ற படங்களை சொல்லலாம்.

பையா படத்தின் போது நடந்த சுவாரசியமான நிகழ்வு ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் லிங்குசாமி பகிர்ந்துள்ளார். பையா படத்தில் முதன்முதலாக கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருந்தாராம். சில பிரச்சனைகளுக்கு பிறகு அப்போதுதான் நயன்தாரா தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ.

இந்நிலையில் மற்ற படங்களில் கமிட் செய்ய குறைந்த அளவு சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்ததாகவும், அதிலிருந்து பையா படத்திற்காக கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு லிங்குசாமி கேட்டாராம். ஆனால் கொஞ்சமும் பிடிகொடுக்காமல் பேசிய நயன்தாராவை தூக்கி விட்டு, அதன்பிறகு தான் தமன்னா படத்திற்குள் வந்ததாக லிங்குசாமி கூறினார்.

லிங்குசாமி தனது சகோதரர் போஸ் என்பவருடன் சேர்ந்து எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top