Connect with us
boomerang-movie

அல்லு அர்ஜூன் படத்தால் நின்றுபோன சண்ட கோழி 2

News | செய்திகள்

அல்லு அர்ஜூன் படத்தால் நின்றுபோன சண்ட கோழி 2

allu-arjun-lingusamyலிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருந்த ‘சண்டக்கோழி’ திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் முதல் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் திடீரென இந்த படம் ரத்தானது என விஷால் அறிவித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஷாலின் இந்த கோபத்திற்கு காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. லிங்குசாமி தற்போது அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ள ஒரு தெலுங்கு படத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வந்தாராம். அல்லு அர்ஜூனின் கால்ஷீட்டும் உடனே கிடைத்துவிட்டதால் முதலில் அல்லு அர்ஜூன் படத்தை இயக்கிவிட்டு பின்னர் ‘சண்டக்கோழி 2’ படத்தை இயக்க அவர் திடீரென தனது திட்டத்தை மாற்றிக்கொண்டாராம்.

ஆனால் ‘மருது’க்கு பின் ‘சண்டக்கோழியில் நடிக்க தயாராக இருந்த விஷாலுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்ததாகவும், அதனால் இந்த திடீர் ரத்து அறிவிப்பை அவர் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜூனின் புதிய படத்தால் சண்டக்கோழி பலியாகிவிட்டதாக கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top