பெரிய நடிகர்கள் பண்ணும் அட்டுழியம்.. எமோஷனல் ஆன KS ரவிகுமார்

ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஸ்டார் அத்தனை பேருடனும் பணியாற்றிய KS ரவிக்குமார், ரீசண்டாக பிக்பாஸ் புகழ் தர்ஷன்,மற்றும் லாஸ்லியா நடிப்பில் ‘கூகுள் குட்டப்பா’ என்னும் படத்தை தயாரித்து நடித்தும் இருக்கிறார். இந்த படம் மலையாள படமான ‘ஆண்டராய்டு குஞ்சப்பன்’ படத்தின் தமிழாக்கம் ஆகும்.

KS ரவிகுமார் இயக்குனர் விக்ரமனிடம் இணை இயக்குனராக இருந்தவர். 1990 ஆம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்தி மூலம் இயக்குனரானார். நாட்டாமை, முத்து, நட்புக்காக என தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களுடன் பணியாற்றினார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடைந்து விடும்.

Also Read: KS ரவிக்குமார் இரண்டாம் பாகம் எடுக்க அடம்பிடிக்கும் 5 படங்கள்.. பெரிய பெரிய தலைகளுக்கு கொடுத்த மெகா ஹிட்

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய KS ரவிகுமார் தான் 10 ஆண்டுகளாக உதவி இயக்குனராக இருந்ததாகவும், தன்னுடைய முதல் படமான புரியாத புதிர் கூட தான் தேடிய வாய்ப்பு இல்லை என்றும் அந்த படம் அவரை தேடி வந்த வாய்ப்பு என்றும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், கமல் ஹேராம் திரைப்படம் தொடங்கும் சமயத்தில் நான் இந்த படம் முடித்த பிறகு உங்களுடன் ஒரு படம் பண்ணுகிறேன், அதை நீங்களே ப்ரொடியூஸ் பண்ணுங்கள், அந்த படத்திற்கு பிறகு மருதநாயகம் எடுக்க இருப்பதாகவும் கூறினாராம். அப்படி KS ரவிகுமார் தயாரித்த படம் தான் ‘தெனாலி’.

Also Read: ரஜினி, ரம்யா கிருஷ்ணனுக்காக 11 டேக் எடுத்த KS ரவிக்குமார்.. 23 வருடம் கழித்து வெளிவந்த உண்மை

அதே போன்று அமைந்தது தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அவருடைய மகள் இயக்கிய கோச்சடையான் திரைப்படமும். இது முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும், இந்த படம் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. கூகிள் குட்டப்பாவில் முதலில் தனக்கு நடிக்க தான் வாய்ப்பு வந்ததாகவும், தானே முன்வந்து படத்தை தயாரித்தாகவும் கூறியிருக்கிறார்.

ரஜினிக்கு முத்து, படையப்பா கமலுக்கு அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், தசாவதாரம், விஜய்க்கு மின்சார கண்ணா, அஜித்துக்கு வரலாறு என்று டாப் நடிகர்களை வைத்து படம் இயக்கிய KS ரவிக்குமார் இப்போது தானாக போய் வாய்ப்பு கேட்க கூச்சமாக இருப்பதாக எமோஷனலாக கூறியிருக்கிறார்.

Also Read: ஹீரோக்களை ஓரங்கட்டி.. ஞாயம்டா, நீதிடா என நாட்டாமை விஜயகுமார்காக ஓடிய 6 படங்கள்!

 

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்