இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் பீட்சா படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தார், இவருக்கு தற்பொழுது அதிர்ஷ்டம் அவரின் பக்கம் வீச தொடங்கியுள்ளது ஆம் இவர் தற்பொழுது ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார், இவரிடம் கதை கேட்ட சூப்பர்ஸ்டார் ரஜினியும் கதைக்கு ஓகே சொல்லி 45 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளார்.

இதை பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேசியுள்ளார் அவர் கூறியதாவது ரஜினி சாரை வைத்து படத்தை இயக்க பயம் எதுவும் இல்லை, எனது வீட்டில் யாருக்கும் சினிமா பின்புலம் இல்லை, நானும் சாப்ட்வேர் இஞ்சினியர் தான் அதனால் நேரடியாக என்னால் இயக்குனராக ஆக முடியவில்லை குறும்படம் எடுத்து அதில் வெற்றி பெற்று தான் இந்த நிலையை அடைந்தேன்.

சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து இயக்குவதற்கு எனக்கு ஆர்வமாக இருக்கிறது, யாருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும், யாருக்குதான் ரஜினி சாரை வைத்து இயக்க ஆசை இல்லை, எனக்கு கொஞ்சம் பயம்தான் ஆனால் கண்டிப்பாக ஒரு நல்ல படத்தை கொடுப்பேன், இந்த வருடத்திற்குள் என்னுடைய படத்தின் அணித்து வேலையையும் முடித்துவிடுவேன் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார், மேலும் படத்தை சன் பிக்சர் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.