Tamil Cinema News | சினிமா செய்திகள்
புது ரூட் பிடித்த கார்த்திக் சுப்புராஜ்… எப்படிலாம் யோசிக்கிறீங்க சார்
பிரபல கோலிவுட் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் வெப் சீரிஸை தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

Karthik-Subbaraj
குறும்படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து, பாபி சிம்ஹாவை வைத்து இவர் இயக்கிய படம் ஜிகர்தாண்டா. அப்படத்தில், சித்தார்த், கருணாகரன், லட்சுமி மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு ஆஹாஓஹோ வரவேற்பு கிடைத்தது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாபி சிம்ஹா வேடத்தை வெகுவாக பாராட்டினார். இதை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியத்தில் வெளியான படம் இறைவி. எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்து இருந்தார். படத்தில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் சண்டை முக்கிய காட்சிக்களமாக காட்டப்பட்டு இருந்தது.
இப்படத்தை வெளியிட்ட ஸ்டூடியோக்ரீன் ஞானவேல் ராஜா, கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்ததற்கு வருந்துகிறேன். அவர் உதவி இயக்குனராக பணியாற்றாமல் இயக்குனராகி விட்டார் அவருக்கு அந்த வலி எப்படி தெரியும். குறிப்பிட்ட பட்ஜெட்டை விட அதிகப்படுத்தி, தயாரிப்பாளருடன் மனக்கசப்பை ஏற்படுத்தி கொண்டார் என ஒரு ஆடியோவை வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கம் வரை இப்பஞ்சாயத்து சென்றது. கார்த்திக்கிற்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இருந்தும், எல்லா தடைகளை உடைத்து கொண்டு த்ரில்லர் ஜானரில் வசனங்களே இல்லாத மெர்குரி படத்தை இயக்கினார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

karthik
இதை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்த படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் அரசியல் சார்ந்து இருக்கும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகிறது. இத்தனை வேலைகளுக்கு இடையிலும் கார்த்திக் சுப்புராஜ் வெப் சீரிஸ் தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
தமிழ் முதல் வெப் சீரிஸ், ஆஸ் ஐ எம் செவரிங் ப்ரம் காதல் தான். இதை மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கினார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் அனைவரும் வெப் சீரிஸ் பக்கம் திரும்பி இருக்கின்றனர். ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ் என்ற யு ட்யூப் சேனலை தொடங்கி இருக்கிறார். அதன் வழியாக, வெப் சீரிஸ், மியூசிக் வீடியோஸ் மற்றும் ஆவணப் படங்களைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.
