Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலியல் தொல்லைகளுக்கு காரணமே பெண்கள் தான்.. சத்தியம் செய்து கூறும் பாக்யராஜ்
பாலியல் தொல்லைகள் நடப்பதற்கு காரணம் பெண்கள் தான் என இயக்குனர் பாக்யராஜ் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கருத்துக்களை பதிவுசெய் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு சென்ற பாக்கியராஜ் அவர்கள் அங்கு பேசிய கருத்துக்கள் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அவர் கூறியதாவது, பெண்கள் அதிகமாக செல்போன்களை உபயோகம் செய்வதால்தான் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது என்றும், ஒரு காலத்தில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் இருந்தவரை இதுபோன்ற தவறுகள் நடந்தது இல்லை என்றும் கூறினார்.
ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் பெண்கள் மொபைல் போன்களில் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பதாலும், எல்லைகள் மீறுவதால் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து வருகிறதுஇன்றும் எடுத்துரைத்தார்.
ஆண்கள் சின்னவீடு வைத்துக் கொண்டால் அது பணம் காசுடன் முடிந்துவிடும் என்றும், தற்போது வரும் செய்திகள் கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற கொடூரம், குழந்தையைக் கொல்வது என பெண்கள் அனைத்துக்கும் துணிந்து விட்டனர் என்றும் வருத்தத்துடன் கூறினார்.
மேலும் பொள்ளாச்சி சம்பவம் குறித்து அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
