Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் விதை நீ, என் விருட்சம் நீ- மனதார பாராட்டிய சீனியர் இயக்குனர்! சந்தோஷத்தில் சூர்யா
சூரரை போற்று – 2 டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில், சுதா கொங்கராவின் இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் OTT யில் நேரடி ரிலீஸ் ஆனா படம். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு, ஜி வி பிரகாஷ் இசை அமைத்துள்ள படம்.
படம் வெளியான பின் இந்தப் படத்தைப் பார்த்த சாமானிய ரசிகன் தொடங்கி, சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இந்த லிஸ்டில் இணைந்துள்ளது இயக்குனர் வசந்த் அவர்கள்.

vasanth suriya
1997ஆம் ஆண்டு ‘நேருக்கு நேர்’ படத்தில் வாயிலாக சூர்யாவை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் வஸந்த் அவர்கள் தான். அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது பின்வருமாறு …
”அன்புள்ள சூர்யாவுக்கு,
இந்தப் பாராட்டுக் கடிதம் உனக்கு இல்லை, நெடுமாறன் ராஜாங்கத்திற்கு. முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை உன் ஆட்சிதான். காட்சிக்கு காட்சிக்கு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாய்!
தமிழ்த் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் இதுதான் உன் உச்சம்’ இப்போதைக்கு!! நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை, ரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய்.
முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்தத் தீவிரத் தன்மை, அதைச் சாதிக்க வேண்டும் என்ற வெறி உன் கண்களில் இறுதிவரை தெரிகிறது. கனல் மணக்கும் பூக்களாக… ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்துக்கு மிகச் சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்.
உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன் “HATS OFF TO YOU MY DEAR SURIYA”. என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்துவிட முடியும். ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ. எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது. உச்சி முகர்ந்து, உச்சி முகர்ந்து மகிழ்கிறேன்”.

director vasanth in praise of surya
சூர்யா தனது நன்றிகளை பகிர்ந்துள்ளார்.
