Connect with us
boomerang-movie

சாமி-2வுக்கு பிறகு சிங்கம்-4…?

Hari-Singam3

News | செய்திகள்

சாமி-2வுக்கு பிறகு சிங்கம்-4…?

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம், சிங்கம்-2 படங்களைத் தொடர்ந்து தற்போது சிங்கம்-3 உருவாகி ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்தி பிரமாண்ட படமாக இயக்கியுள்ளார் ஹரி. சில மாதங்களுக்கு முன்பே படம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், பலமுறை ரிலீஸ் தேதிகளில் அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்று தேதிகளை அறிவித்து வந்தவர்கள் தற்போது பிப்ரவரி 9-ந்தேதியான நாளை வெளியிடுகிறார்கள்.

மேலும், இந்த படத்தை முடித்ததும் விக்ரம் நடிப்பில் சாமி-2 தொடங்க ஏப்ரலில் இயக்க திட்டமிட்டிருந்த ஹரி, தற்போது விக்ரம் இரண்டு படங்களில் நடித்து வருவதால் தனது படத்தை ஜூன் மாதம் தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம். அதோடு, சாமி-2 படத்தை இந்த ஆண்டிற்குள் இயக்கி முடிக்கும் அவர்,அடுத்த ஆண்டு மீண்டும் சூர்யா நடிப்பில் சிங்கம்-4 படத்தை இயக்குகிறாராம். அதேபோல் சாமி-2 வெளியான பிறகு மீண்டும் விக்ரம் வைத்து சாமி-3 படத்தையும் இயக்க டைரக்டர் ஹரி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top