Tamil Cinema News | சினிமா செய்திகள்
அருண் விஜய்யை ஒதுக்கிவிட்டு நான்காவது முறையாக பிரபல முன்னணி நடிகருடன் கைகோர்க்கும் ஹரி.. கதறும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் கமர்ஷியல் ஹீரோக்களாக வலம் வர முக்கியமாக இருந்தவர் ஹரி.
அதுவும் சூர்யாவுக்கு அவருடைய கேரியர் இந்த அளவுக்கு உயர ஹரி படங்களே காரணம் என்றால் மிகையாகாது.
அதேபோல் ஹரி இயக்கத்தில் இன்னொரு முன்னணி நடிகரும் இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார். மூன்று படங்களில் இரண்டு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
அவர் வேறு யாரும் இல்லை. நம்ம சீயான் விக்ரம் தான். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் சாமி, அருள், சாமி ஸ்கொயர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் சமீபத்தில் வந்த சாமி ஸ்கொயர் படம் மற்றும் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் ஹரியின் மார்க்கெட்டுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் மீண்டும் ஹரி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் விக்ரம்.
சமீபத்தில் சூர்யா மற்றும் ஹரி இணைய இருந்த படம் கைவிடப்பட்டதால் தனது மச்சான் அருண் விஜய்யுடன் ஹரி ஒரு படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ட்விஸ்ட் வைத்து விக்ரம் உள்ளே நுழைந்துள்ளார். என்ன ஆகப்போகுதோ!
போலீஸ் படம் மட்டும் வேண்டாம் என கதறுகிறார்கள் நம்ம ரசிகர்கள்.

hari-vikram-cinemapettai
